ஒமர் என்பவர் 1998ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது காணாமல்போயுள்ளார்.
அப்போது அவருக்கு 19 வயதாக காணப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
தற்போது சுமார் 45 வயதாகும் ஒமர், தமது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள பக்கத்து வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 61 வயது நபர் தப்ப முயன்றதாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நீதி அமைச்சு தெரிவித்தது.
சொத்துப் பிரச்சினையால் கடத்தியவரின் சகோதரர் சமூக ஊடகத்தில் கடத்தல் குறித்து தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
தம் மீது மந்திரம் செலுத்தப்பட்டதால் உதவி கேட்க முடியவில்லை என்று ஒமர் கூறியதாக அல்ஜீரிய ஊடகங்கள் கூறின. ஒமருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.