2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் திங்கட்கிழமை (03)க்கு முன்னர் வெளியிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான பணிகளை தற்போது பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அத தெரன வினவியதற்கு பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெற்றதுடன் மொத்தம் 346,976 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 281,445 பள்ளி விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்கள்.