பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாய் வழங்குவது தொடர்பில் நேற்று (01) வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தம்மால் நாளாந்த சம்பளமாக ரூ. 1700 ஐ வழங்க முடியாதென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்விதமான தொடர்பாடல்களையும் மேற்கொள்ளாமல் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குவதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அச்சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட கம்பனிகளின் உயரதிகாரிகளுடன் கொழும்பில் வியாழக்கிழமை(2) நடைபெறவுள்ளதாகவும், இந்த சந்திப்பைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை நாடும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.