கண்டி - கலஹா நகரில் நேற்று (12) இரவு நகரில் உள்ள இரு வீடுகளையும் ஒரு வியாபார நிலையமும் உடைத்து திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கலஹா நகரில் உள்ள ஒரு வீட்டில் 4 பவுன் பெறுமதியான தாலிகொடி, மற்றுமொரு வீட்டில் துவிச்சக்கர வண்டி மற்றும் வியாபார நிலையத்தை உடைத்து கையடக்க தொலைபேசி ஆகியவற்றை சிறுவன் திருடி சென்றுள்ளான்.
இதனை தொடர்ந்து கலஹா பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் முறைப்பாட்டு செய்ததையடுத்து, கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குனசேகர தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொருட்களை திருடிய நில்லம்பை பகுதியைச் சேர்ந்த 15 வயது சந்தேக நபரான சிறுவனை கலஹா ஆரேக்கர் மைதானத்தில் இருந்த போது கைது செய்துள்ளனர்.
கைது செய்து விசாரணையின் போது பொலிஸார் பொருட்கள் மீட்டுள்ளனர்.
இன்று சந்தேக நபர் கலஹா பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.