முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கரவண்டியில் பயணித்த போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, எகொட உயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இவரால் திருடப்பட்டுக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முச்சக்கர வண்டி கேசட் பிளேயர் மற்றும் இரண்டு கையடக்க தொலைசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.