தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 வயது சிறுமி, 4 பந்தய உதவியாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.