இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் உள்ள சினோபெக் எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது நுகர்வோர் இந்த விலை மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சினோபெக் அறிவித்துள்ள விலை திருத்தத்தின் படி ஒக்டேன் 95 பெட்ரோலுக்கு லீட்டருக்கு 7 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக உள்ளது.
அதேபோல், சூப்பர் டீசல் லீட்டருக்கு 72 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய் விலையும் லீட்டருக்கு 12 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக உள்ளது.
எவ்வாறாயினும், ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு முறையே 368 ரூபா மற்றும் 360 ரூபா என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயித்துள்ள விலைகளுக்கு ஏற்ப, மாற்றமில்லாமல் இருக்கும் என்று சினோபெக் உறுதிப்படுத்தியுள்ளது.