ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசான் அமரசேன, இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி, தாபரே மாவத்தையில் உள்ள பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் நீதிமன்றில் முன்னிலையான கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அதிபருமான உலப்பனே சுமங்கல தேரர் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாத காரணத்தினால் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவித்த நீதவான், சந்தேகநபர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதால் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அறிவித்தார்.