நாட்டில் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாதாந்தம் தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகம அபகஸ்தோவ விளையாட்டரங்கில் இன்று (21) இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தேசிய அரிசி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோஸ்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதம் வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசியானது ஏற்கனவே நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கு ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.