தியத்தலாவ நரியகந்த ஃபாக்ஸ்ஹில் ஓட்டப் பந்தயத்தின் போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்த வாகன விபத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (22) கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
Foxhill மோட்டார் பந்தயத்தின் பந்தய இலக்கம் 5 இன் கீழ் போட்டியிட்ட மாத்தறை மெடபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒருவரும், பந்தய இலக்கம் 196 இன் கீழ் போட்டியிட்ட பேராதனை மகந்த பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று (21) தியத்தலாவ, நர்யகந்தேவில் ஃபாக்ஸ்ஹில் மோட்டார் பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தின் போது ஒரு கார் தடத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது, அதைப் பார்க்கச் சென்றபோது, அங்கு இருந்த கடும் புழுதியால் பாதையில் போட்டியிட்டுக் கொண்டிருந்த இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், ஏழு பேர் உயிரிழந்தனர். இதில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.