கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (04) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் மே மாத நடுப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.