உள்நாட்டு முட்டைகளினது விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை குறைக்கப்பட்டாலும் உள்நாட்டு முட்டையினது விலை அதிகரித்து காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கினறனர்.
பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் லங்கா ச.தொ.ச முட்டையொன்றின் விலையை 42 ரூபாவில் இருந்து 36 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், அண்மைய நாட்களில் 40, 45 ரூபாவாக குறைக்கப்பட்ட உள்ளுர் முட்டையின் விலை புத்தாண்டின் போது 50 முதல் 60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.