தியத்தலாவையில் மோட்டார் பந்தய போட்டியின் போது ஏழு பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சாரதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பில் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரையும் பொலிஸார் கைது செய்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.