விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதுவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட நான்கு பேரை தலா இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் மற்றுமொரு சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், உலப்பன சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், நாரஹேன்பிட்டி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.