காலி - திதிஸ்வத்த பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அயல் வீட்டில் வசிப்பவருடன் ஏற்பட்ட பழைய பகைமையினால், சந்தேகநபரால் கத்திக் குத்துக்கு இலக்காகி குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
இதன்பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.