இவ்வாரம் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளின் போது பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பை வழங்கும் விசேட திட்டத்தை இலங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்த உள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்புத் திட்டத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிற்கும் உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் மௌலவிகளையும் சந்தித்து விசேட பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மொத்தம் உள்ள 3,203 பள்ளிவாசல்களில், பெருநாள் தொழுகை நடத்தப்படும், இந்நிலையில் 2,453 பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக 5,580 காவல்துறை அதிகாரிகள், 510 காவல்துறை சிறப்புப் படையினர் மற்றும் 1,260 முப்படை வீரர்கள் உட்பட 7,350 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். (யாழ் நியூஸ்)