தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கம்பஹா மாநகர சபை வளாகத்தில் மே தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.