ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வைப்புத்தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவரின் வைப்புத்தொகை ரூபா 2.6 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுயேட்சை கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரின் வைப்புத்தொகை ரூபா 3.1 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து தேவையான விதிமுறைகளை திருத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.