போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து, இது தொடர்பில் பரிசீலித்த நீதிமன்றம் முன் பிணைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.