ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)