நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட இலங்கை நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தம்பதியினர் இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நிதி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தம்பதிக்கு பயணத்தடை விதித்திருந்தது.
கடந்த வாரத்தின் தொடக்கத்தில், குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுக்கான தம்பதியினரின் கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் சுமார் 3 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.