இந்த நபர்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 40 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொரகஹஹேன, கெஸ்பேவ, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, கஹதுடுவ, கடுவெல, தெபுவன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து இரு சக்கர வாகனங்களை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு வாகனத்தை பயன்படுத்தி திருடர்கள் மோட்டார் சைக்கிள்களை வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கொள்ளையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும், பல பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)