கல்பிட்டியில் 37 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தி 37 கிலோ தங்கத்தை திருடிய சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5 பேரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை 071 8591763 அல்லது 071 8594916 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.