நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (04) சரணடைந்த நிலையில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நடிகை மற்றும் அவரது கணவருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பயணத்தடை விதித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் கீழ் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுக்கான தம்பதியினரின் கோரிக்கையையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாட்டு வேலைகளை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Actress and Aragalaya Activist Damitha Abeyrathna appears in court today. #Lka pic.twitter.com/JNtQM71Yh1
— Manjula Basnayake (@BasnayakeM) April 4, 2024