ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல், ஈரானின் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்தில் கவிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கப்பல் கவிழ்ந்ததையடுத்து, மீட்புக் கப்பலொன்று அப்பகுதிக்கு அனுப்பபட்டதாகவும், 21 கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும் ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.