பொத்துவில் அறுகம்பையில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் நேற்று 35 வயதுடைய பெண் ஒருவர் கணவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரான 51 வயதுடைய நபரும் சம்பவத்தை தொடர்ந்து அதே அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பதியினர் தங்குவதற்காக ஹோட்டலுக்கு வந்ததாகவும், ஆனால் அவர்கள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் எழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறுகம்பை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு ஹோட்டல் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர், அவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது பெண் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.
பின்னர் ஹோட்டல் அறையின் கழிவறைக்குள் கணவர் தற்கொலை செய்துகொண்டதை கண்டுபிடித்தனர்.
குறித்த பெண் மஹகளுகொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகவும், ஆண் பொத்துவில் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)