இலங்கை நாணயத்தாள்களை வேண்டுமென்றே சிதைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி (CBSL) சமூக ஊடகங்களில் இத்தகைய நடவடிக்கைகள் விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை தயாரிப்பதற்கு நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாணயத் தாளை அதன் அசல் வடிவத்திலிருந்து மாற்றுவது அல்லது சிதைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று CBSL எச்சரித்தது.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 25 மில்லியன் ரூபா அபராதம் அல்லது அதிகபட்சமாக மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.