பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை இன்று (28) வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, பௌத்த பிக்குவுக்கு 100,000 ரூபா அபராதமும் விதித்தார்.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றப்பத்திரிகைகளிலும் ஞானசார தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குரகல பௌத்த விகாரை தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாக தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)