பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (03) தொம்பகஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண்ணை அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தொம்பகஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)