எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண பாடசாலை வருட இறுதிப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல்மாகாண பருவப் பரீட்சை ஒன்றின் விடைத்தாள் ஒன்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பரீட்சைகள் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களங்களால் நடத்தப்பட்ட பல பாடசாலை தவணைப் பரீட்சைகளில், பரீட்சைக்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வந்தன.
2023ஆம் ஆண்டுக்கான வருட இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைக்காக மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரம் 10 மற்றும் 11ஆம் தரங்களின் விஞ்ஞானம் மற்றும் வரலாறு வினாத் தாள்கள் நேற்று முன்தினம் இரவு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11ஆம் தர மாணவர்களுக்கான செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கணிதப் பாட வினாத்தாள் தொடர்பான விடைத்தாள் என கூறப்படும் ஆவணம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள 10ஆம் தர ஆங்கில மொழி பாட வினாத்தாளின் இரண்டாம் பாகம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.உபாலி சந்திரகுமாரவை தொடர்பு கொண்டு கேட்டபோது, மாகாணக் கல்விச் செயலாளரால் இது தொடர்பான அறிக்கைகளை வெளியிட முடியும் என்றார்.
இதன்படி, சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் திரு.சாமர பமுனுஆராச்சியை இன்று பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் செயலாளர் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை.