கோட்டை நீதவான் மீதான கொலை முயற்சி: உடனடி விசாரணைக்கு பணிப்புரை!

கோட்டை நீதவான் மீதான கொலை முயற்சி: உடனடி விசாரணைக்கு பணிப்புரை!


கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அமைச்சர் டிரான் அலஸ் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.


நீதவான் திலின கமகேவை கொல்வதற்காக ஒருவர் தொலைபேசி ஊடாக T81 கிரனேட் லாஞ்சர் ரக துப்பாக்கியை கோரியுள்ளதாக அரச உளவாளி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


குறித்த நபரின் தொலைபேசி இலக்கங்களுடன் விபரங்களை உளவாளி வழங்கியுள்ளதுடன் அந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News