இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பான அறிவுறுத்தல்கள் தொடர்பான புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு அரச பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளது.
அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், மாணவர்களுக்கு ஏற்படும் சுகாதார அபாயங்களைக் கருத்தில் கொண்டு சுற்றறிக்கையை கடைப்பிடிக்குமாறு அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் கல்விக் காலத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டம், அதாவது ஏப்ரல் 24, 2024க்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் செயல்பட பாடசாலைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.