தங்குமிட விடுதியில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு ஒருவரே தியத்தலாவ பொலிஸ் குழுவினால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பிக்கு, பொரலந்த பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரையைச் சேர்ந்த 45 வயதானவர் என்றும், அந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான நாற்பது வயதான பெண்ணாவர்.
பெண்ணொருவர் மாற்றுப்பெயருடன் விடுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.