2024 ஆம் ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் இதுவரை தங்கள் பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லையெனில் தமக்கு அறிவிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் கல்வி அமைச்சு இன்று கோரியுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைத் துணிகள் நாட்டிலுள்ள பிரதேசக் கல்வி அலுவலகங்கள் ஊடாக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்களை பின்வரும் தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் ஊடாக உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
பாடப் புத்தகங்களுக்காக 0112784815 அல்லது 0112785306 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Fax: 0112784815
E-mail: epddistribution2024@gmail.com
சீருடைகளுக்காக 0112785573 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Fax: 0112785573
E-mail: schoolsupplymoe@gmail.com