இவ்வாறே தொடர்ந்தால் இன்னும் சிறிது காலத்தில் முழு பாராளுமன்றமும் பழைய சேறும் சகதியுமாக மாறிவிடும் என்றும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்றத்தில் உள்ள முதியோர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென கெட்டம்பே ஸ்ரீ ராஜோப வானராமாதிபதி ராமன்ய நிகாய கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரனசிங்க, அவரை சென்று வழிபட்டதன் பின்னர் கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.
அரசு ஊழியர்கள் 60 வயதை எட்டிய பின், கடினமாக உழைக்க முடியாது என்பதால் ஓய்வு பெறுகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தில் ஓய்வு பெறும் வயதை கடந்தவர்கள் ஏராளம். சிலர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று பாராளுமன்றத்துக்கு வருகிறார்கள்.
அடுத்த வேலையைச் செய்ய பாராளுமன்றத்திற்கு வருகிறார்கள். இளைஞர்களுக்கு இடம்கொடுத்து விட்டு செல்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. பாராளுமன்றத்திற்கு வர போராடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு நாட்டு மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை. அவர்கள் நாட்டின் வளங்களை விற்று தங்கள் தலைமுறையை மகிழ்ச்சியடையச் செய்ய விரும்புகிறார்கள் என்றார்.
நாட்டில் ஒரு சாதாரண மனிதன் ஐம்பது அல்லது நூறு ரூபாய் திருடினால், அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். ஆனால், ஒரு பெரிய மனிதர் கோடிக்கணக்கில் அல்ல, பல கோடிக்கணக்கில் திருடினாலும், அவர்களுக்கு எதிராக சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக புரட்சி செய்து பதவியை இழந்தவர் ரொஷான் ரணசிங்க. பதவிகளைத் துரத்தி எதேச்சதிகாரமாக தன்னைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டு வேலை செய்தவர் அல்லர். இந்த இளம் எம்.பி.க்களை போன்று நாட்டை நேசிக்கும் இளம் எம்.பி.க்களும் உள்ளதாகவும், அந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வயதான எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும், அவர்கள் வெளியேறவில்லை என்றால் புதிய சட்டங்களை கொண்டு வாருங்கள் அல்லது அவற்றை நீக்குவதற்கான நேரம் இது என்றார்.