சட்டவிரோதமான முறையில் விமானம் ஊடாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 09 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று (04) இந்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் ஒருவர் இந்தியாவில் இருந்து வந்த பயணி எனவும் மற்றையவர் விமான சேவையில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கடன் அட்டைகள், ஜெல் மற்றும் தங்க நகைகள் என்ற போர்வையில் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.