சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இவை முஸ்லிம் சமய திணைக்களம் புனித நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
சவுதி அரேபியாவின் இலங்கைக்கான துாதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் பௌத்த சாசன மற்றும் மத கலாச்சார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் சைனுல் ஆப்தீன் முகம்மது பைசல் ஆகியோரிடம் முஸ்லிம் சமய திணைக்களத்தின் வைத்து கையளித்தார்.
இந்த விழாவில் சவுதி அரேபியாவின் புதிய தூதுவராக செல்ல உள்ள அமீர் அஜ்வாத் அவர்கள் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.