வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பினோயா மேல் பகுதியில் உள்ள தோட்ட வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
3 வயது 9 மாத வயதுடைய கதிரவேல் ரோஹித்தின் சடலமே விவசாய கிணற்றில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதால், குழந்தையின் தந்தை மற்றும் தோட்ட வீடுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.