எல்பிட்டிய, தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் சிறுமியின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பலியானவர் ஹன்சிகா எனப்படும் கரந்தெனிய, தல்கஹவத்தை பகுதியைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன்னரும் பல தடவைகள் அவரது மைத்துனரால் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டை விசாரிக்குமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட நோட்டீஸின் பிரகாரம், பாதிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை (08) காலை தனது தாய் மற்றும் சகோதரியுடன் முச்சக்கர வண்டியில் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, அவரது மைத்துனர் மீண்டும் அவளை கடத்தியுள்ளார்.
ஹன்சிகாவின் பெற்றோர் மீண்டும் எல்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆனால் முறைப்பாடு விசாரணைக்கு வருவதற்கு முன்னர், சனிக்கிழமை (09) காலை கரந்தெனிய தல்கஹவத்த பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கிராமவாசி ஒருவரால் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து, தேயிலை தோட்டத்தில் சடலத்தை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் கொலை செய்து இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மைத்துனரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)