ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள கச்சேரி அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதுடன் 140 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தாக்குதல் நடத்திய 11 சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட 11 பேரில் நேரடியாக தொடர்புடைய நான்கு பேர் அடங்குவர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
குரோகஸ் கச்சேரி அரங்கின் மீதான தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் "கணிசமான அளவு உயரக்கூடும்" என்று மொஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநர் Andrei Vorobyev தெரிவித்துள்ளார்.
140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் அவர்களில் ஒரு குழந்தை உட்பட பதினாறு பேர் இன்னும் "மிகவும் மோசமான நிலையில்" உள்ளனர், என ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் 44 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மொத்தம் 107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான இருப்பிடம் மற்றும் நிலையை அறிந்து கொள்ள தொலைபேசி இணைப்பு திறக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் நேற்றையதினம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாகவும் படுகாயமடைந்தோர் 100 எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஆப்கானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ISIS-K என்ற அமைப்பு 2014 முதல் ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவலாக செயல்பட்டுவரும் குழுவாகும்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்துள்ள ISIS-K அமைப்பு, இஸ்லாமியர்களை அடிமைகளாக நடத்துவதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.