அரச ஊழியர்களுக்கான உத்தேச 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை இந்த வருடம் ஏப்ரல் மாதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வின் ஒரு பகுதியாக அரசாங்கம் 5000 ரூபாயை வழங்கியதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏப்ரல் மாத ஊதியத்தில் சேர்த்து 10,000 ரூபாய் முழுவதையும் அரசாங்கம் இப்போது செலுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)