100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் படி, இரண்டு பயணிகளும் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டுபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)