பங்களாதேஷ் இற்கு எதிரான டி20 தொடரில் இருந்து உபாதை காரணமாக பேட்ஸ்மேன் குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டுள்ளார்.
இவர் அணியில் இடம் பெற்றிருந்த போதிலும் இன்று பங்களாதேஷ் நோக்கிப் புறப்பட்ட இலங்கை அணியுடன் அவர் பயணிக்கவில்லை.
கமிந்து மெண்டிஸ் குசல் ஜனித்தின் மூன்றாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது, சரித் அசலங்க தனது ஐந்தாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்.
இதேவேளை, குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
தம்புல்லையில் இன்று நடைபெற்ற தேசிய சூப்பர் லீக் (என்எஸ்எல்) ஆட்டத்தில் அவர் 21 பந்துகளில் 50 ரன்கள் விலாசியிருந்தார்.