எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்குவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலை அல்ல பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி பசில் ராஜபக்ச இலங்கைக்கு வரும் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், வாகன அணிவகுப்பு அவரை கொழும்புக்கு அழைத்து வரும் என்றும் அவர் கூறினார்.