தானும் ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டார்.
அவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடந்தும் அவர் தெரிவிக்கையில்,
தனது மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வழங்கப்படும் மருந்துகள் குறித்து அவதானம் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிறந்தவுடன் போடவேண்டிய ஊசி ஒன்று உள்ளது. அதை தனியார் வைத்தியசாலைகளில் மட்டுமே போடப்படுகின்றன. காரணம் இதன் விலை அதிகம் என்றார்.
இதுதான் இந்த நாட்டின் நிலை. இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்குகின்ற அதே பராமரிப்பினை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.