பொருளாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுமி காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுமி காயம்!


மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இன்று (12) காலை கொள்ளையடிக்க வந்தவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அப்போது கடையில் காசாளராக இருந்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுட்டதில், சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள், கீழே இருந்த இருந்து பெட்டகத்தின் பணத்தை பெற சாவியை கேட்டு குறித்த சிறுமியை சுட்டுள்ளனர்.


அதன்பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.


திருடப்பட்ட பணம் குறித்த விபரம் இதுவரை வெளிவராத நிலையில், காயமடைந்த சிறுமி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.