இதில் நான்கு பிரிவுகள் எப்போதும் போல் இருக்கிறது. இதில் அதிகபட்ச சம்பளமான ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் கொடுக்கப்படும். அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதை அடுத்து கிரேட் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இதில் தமிழக வீரர் அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ,கே எல் ராகுல்,கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். கிரேட் பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
இதில் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ்,ரிஷப் பந்த்,குல்தீப் யாதவ்,அக்சர் பட்டேல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். குரூப் சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். அதில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சர்துல் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னாய், ஜிதேஷ் சர்மா வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன்,ஆர்ஸ்தீப் சிங் கே எஸ் பரத்,பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோன்று ஆகாஷ் தீப், விஜயகுமார் விசாக், உமர் மாலிக் காவேரியப்பா போன்ற வீரர்களுக்கு சிறப்பு ஒப்பந்தத்தை வழங்க தேர்வு குழு பரிந்துரை செய்திருப்பதாக பிசிசிஐ கூறி இருக்கிறது.
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ எடுத்து இருக்கும் நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு புதிய ஒப்பந்தத்தில் இடம் அளிக்கவில்லை. எனினும் குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் அல்லது 8 ஒரு நாள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடி இருந்தால் அவர்களுக்கு கிரேட் சி பிரிவில் இணைக்கப்படுவார்கள் என்று பிசிசி ஐ விளக்கம் அளித்துள்ளது .அந்த வகையில் ஸர்ஃபிராஸ் கான் கிரேட் சி பிரிவில் இடம் பெறுவார்.