கொள்ளுப்பிட்டி கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளில் உள்ள உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை மற்றும் நவம் மாவத்தை, நீர் வெளியேறும் குழாய் அமைப்பதன் காரணமாக தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த கழிவு நீர் வெளியேற்றப்படும் குழாய் கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைக்கப்படும் எனவும், உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை மற்றும் நவம் மாவத்தையில் வசிப்பவர்கள் வீதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையில் இருந்து புகையிரத கடவை வரையான பகுதி திங்கட்கிழமை (05) முதல் (19) வரை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி (20) முதல் மார்ச் (04) வரையிலும் உத்தரானந்த மாவத்தை, பெரஹர மாவத்தை, ரொட்டுண்டா தோட்டம் சந்தி வரையான பகுதி மார்ச் (05) முதல் மார்ச் (11) வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.