மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது வசித்த கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் உள்ள வீட்டை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் வழங்க அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி உரிய வீட்டை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றுக் கொள்கை மையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமைச்சர்கள் சபையின் தலைவராக செயற்படும் மைத்திரிபால சிறிசேன, தமக்கு உரித்தான சலுகைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு மக்களின் நம்பிக்கையை மீறியுள்ளார்.