பஸ்களில் சில்மிஷம் செய்வோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்களில் சில்மிஷம் செய்வோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்!


பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த விசேட நடவடிக்கை இன்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இதற்கமைய இரகசியமான முறையில் கெமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த காவல்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அத்துடன் பெண்களுக்கு பொது போக்குவரத்துகளில் இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பில் அறிவிப்பதற்கு 109 எனும் அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.